இந்தியா பிரதான செய்திகள்

சென்னையிலுள்ள பிரபல ஐரி நிறுவனத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்


தென்னிந்தியப் பகுதிகளுக்குத் தீவிரவாதத் தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், சென்னையிலுள்ள பிரபல ஐரி நிறுவனத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக

கடந்த மாதம் இலங்கை மற்றும் பாகிஸ்தானிலிருந்து சென்ற தீவிரவாதிகள் கோவையில் பதுங்கி இருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்திருந்ததனை தொடர்ந்து புலனாய்வுதுறை அதிகாரிகள் கோவையில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அத்துடன் தென்னிந்தியப் பகுதிகளில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என ராணுவம் எச்சரிக்கை விடுத்திருந்தநிலையில் நேற்றையதினம் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தீவிரவாதி ஷேக் அசதுல்லா என்பவர் சென்னையில் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்தநிலையில் நிலையில், நேற்று இரவு 10.15 மணியளவில் சென்னையில் உள்ள பிரபல ஐரி நிறுவனத்துக்குத் தொலைபேசி வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை கந்தன்சாவடியில் உள்ள 13 அடுக்கு மாடிகளைக்கொண்ட ஐரி நிறுவனத்தின் காவலர்களின் அறைக்குத் தொலைபேசி மூலம் இனந்தெரியாத ஒருவர் குறித்த கட்டடத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் சிறிது நேரத்தில் வெடித்து சிதறி விடும் என்றும் மிரட்டல் விடுத்திருக்கிறார்.

இதுகுறித்து நிறுவனத்தின் உயரதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தி உடனடியாகப் பணியில் இருந்த ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வெளியேற்றப்பட்டதுடன் காவல் துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தரமணி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதுடன் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மோப்ப நாய்களுடன் வந்து 13 மாடி கட்டடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

நேற்று இரவு முழுவதும் சோதனை நடைபெற்றதுடன் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #சென்னை  #வெடிகுண்டுமிரட்டல்  #தீவிரவாதிகள்

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.