இலங்கை பிரதான செய்திகள்

வைத்தியர்களின் போராட்டம் முடிவு


பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட அடையாள வேலை நிறுத்தம் இன்று காலை 8 மணியுடன் நிறைவுக்கு வந்ததாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நவீன் சொய்ஸா தெரிவித்துள்ளார்.

சம்பள பிரச்சினை உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் நேற்று காலை 8 மணி முதல் இன்று காலை 8 மணி வரையில் நாடளாவிய ரீதியில் அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த வேலைநிறுத்தத்தினால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.   #வைத்தியர்களின்   #போராட்டம் #முடிவு

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.