இலங்கை பிரதான செய்திகள்

மீள் குடியேறி 10 வருடங்கள் – எவ்வித அபிவிருத்தியும் காணாத கரியாளை நாகபடுவான் கிராம மக்கள்…

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட கரியாளை நாகபடுவான் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மீள் குடியேறி 10 வருடங்கள் ஆகியும் இதுவரை தாங்கள் தொடர்ச்சியாக அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி அவதியுறுவதாகவும் அரச அதிகாரிகள் தொடர்ச்சியாக பாராமுகமாக செயற்படுவதாகவும் மன்னார் மெசிடோ நிறுவனத்தினால் இன்று ஒழுங்கு செய்யப்பட்ட மக்கள் கருத்து கேட்கும் நிகழ்சி திட்டத்தில் விசனம் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி கரியாளை நாகபடுவான் கிராமத்தை சேர்ந்த மக்கள் யுத்த காலப் பகுதியில் இராணுவ நடவடிக்கை காரணமாக தங்களுடைய சொந்த கிராமத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு தற்காலிகமாக பல்வேறு பகுதிகாலுக்கு இடம் பெயர்ந்து இறுதியில் கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் குறித்த பகுதி மக்கள் அவர்களின் சொந்த நிலங்களில் மீள் குடியேற்றப்பட்டனர்.

ஆனால் மீள் குடியேறி 10 வருடங்கள் கடந்தும் கரியாளை நாகபடுவான் மக்கள் அடிப்படை வசதிகள் கூட பூர்த்தி செய்யப்படாமல் ஒழுங்கான போக்குவரத்து வசதிகால் இன்றி அன்றாட வாழ்வதரத்திற்கே கஸ்ரப்படும் நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

அதே போன்று இது வரை குறித்த மக்களுக்கான ஒழுங்கான போக்குவரத்து வசதிகள், சுகாதர வசதிகள் எவையும் அரசங்கத்தினால் செய்து தரப்படவில்லை எனவும் அதே நேரத்தில் தரம் 5 ஆம் ஆண்டு வரை மாத்திரமே பாடசாலை காணப்படுவதால் 5 தரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் 10 கிலோ மீற்றருக்கு மேற்பட்ட தூரம் காட்டுப் பாதைகளினால் பயணித்தே பாடசாலைக்கு செல்ல வேண்டிய துர்பாக்கிய நிலை காணப்படுவதாக கரியாளை நாகபடுவான் மக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

அதே நேரத்தில் குறித்த கிராமத்தின் பிரதான பாதை மோசமான நிலையில் காணப்பட்டதை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் நிதி ஒதுக்கீட்டில் குறித்த பிரதான பாதைக்கு 20 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் கிரவல் மண் சுமார் 2 கிலோமீற்றருக்கு குவிக்கப்பட்ட நிலையில் குறித்த வீதியானது மூன்று மாதங்கலுக்கு மேலாக பரவப்படாமல் கிறவல் குவிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.

குறித்த கிறவல் மண்ணை பரவித் தருமாறு பல்வேறு பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை யாரும் குறித்த பிரதான பாதையை சீர் செய்வதில் அக்கரை எடுப்பதாக தெரியவில்லை எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர.

யுத்ததால் பாதிக்கப்பட்ட ஏனைய கிராமக்களை அரசாங்கம் மற்றும் பாரளுமன்ற உறுப்பினர்கள் அபிவிருத்தி செய்யும் போது எங்கள் கிராமங்களையும் அபிவிருத்தி செய்ய முயற்சி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்கள் ஆசை என மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே சம்மந்தபட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு தங்களுக்கு ஆடம்பர வசதிகளை செய்து தராவிட்டாலும் அடிப்படை வசதிகளான ஆரம்ப சுகாதர நிலையம், வாய்கால், புனரமைப்பு பிரதான வீதிகள், போக்குவரத்து போன்ற பொதுவான வசதிகளையாவது செய்துதர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மன்னார் நிருபர்

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.