Home இலங்கை சஜித் அன்னம் சின்னத்திலேயே போட்டி

சஜித் அன்னம் சின்னத்திலேயே போட்டி

by admin

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச ஏகமனதாக தெரிவு செய்யப்பட்ட நிலையில் அன்னம் சின்னத்திலேயே போட்டியிடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் தெரிவித்துள்ளார். தன்னிடம் ஒளிவு மறைவு இல்லை எனத் தெரிவித்த அவர் சரத் பொன்சேக்கா மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதற்கு முன்னர் போட்டியிட்ட அன்னம் சின்னத்தில்தான் தான் போட்டியிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சிறிகொத்தவில் ஆரம்பமாகி இடம்பெற்ற போது ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசாவின் பெயரை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க பிரேரித்த நிலையில் அவரது யோசனையை செயற்குழு ஏகமனதாக ஏற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது  #சஜித்  #அன்னம் #போட்டி

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More