நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்த சட்ட ரீதியாக பல தடைகள் காணப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நேற்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் சட்டத்தை பலப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் என்பவை இவ்வாறு நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்த தடையாகவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களை கட்டுப்படுத்த கடுமையான கொள்கைகளை கையாண்டாலும் அதில் பலன் எதுவும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். #நீதி #தேர்தல் #தடைகள் #மகிந்ததேசப்பிரிய
Spread the love
Add Comment