இலங்கை பிரதான செய்திகள்

உயிர் வாழ்வதற்கான உரிமை வேண்டும்

மயூரப்பிரியன்

உயிர் வாழ்வதற்கான உரிமையை அடிப்படை உரிமையாக உறுதிப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி யாழில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்.மத்திய பேருந்து நிலையத்தின் முன்பாக குறித்த போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் ‘உயிர் வாழ்வதற்கான உரிமையை அடிப்படை உரிமையாக உறுதிப்படுத்துக’ எனும் தொனிப்பொருளில் பல மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்படுகின்றதன் தொடராகவே யாழிலும் இப் போராட்டம் நடத்தப்பட்டது.

யாழ்.மத்திய பேருந்து முன்பாக நடைபெற்ற இந்த போராட்டத்தில் நாட்டில் உயிர் வாழ்வதற்காக உரிமையை அடிப்படை உரிமையாக்க வேண்டுமென்று கோஷம் எழுப்பினர்.

இதேபோன்று முல்லைத்தீவு- நீராவியடி விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்துச் செயற்பட்டதற்கும் எதிர்ப்பைத் தெரிவித்ததுடன் இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  # உயிர் #உரிமை #போராட்டம் #நீராவியடி

 

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.