முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஸ் சேனநாயக்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் இயக்கத்தின் சார்பில் மகேஸ் சேனநாயக்க போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு சிவில் சமூக அமைப்புகள் அங்கம் வகிக்கும் தேசிய மக்கள் இயக்கத்தின் மாநாடு இன்று (29.09.19) பிற்பகல் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்றது. இந்த மாநாட்டிலேயே, தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளரான மகேஸ்சேனாநாயக்க அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
Add Comment