இலங்கை பிரதான செய்திகள்

யாழில் உள்ள பிரபல விடுதியின் முக்கிய ஆவணங்கள் வீதியில்…

யாழில்.உள்ள பிரபல நட்சத்திர விடுதியின் ஆவணங்கள் வீதியில் வீசப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. யாழ்.பலாலி வீதியில் திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியார் வங்கிகளுக்கு முன்பாக குறித்த ஆவணங்கள் வீசப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.

குறித்த விடுதியில் தங்கியிருந்தவர்களின் ஆள் அடையாள அட்டை, கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களின் பிரதிகள், விடுதியின் வங்கி ஆவணங்கள் உள்ளிட்ட விடுதியின் கணக்குகள் தொடர்பிலான ஆவணங்கள் என்பனவே வீதியில் வீசப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.

குறித்த விடுதியின் ஆவணங்கள் அடங்கிய பொதிகள் வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யும் போது அவை வீதியில் தவறி விழுந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது,

ஆவணங்கள் அடங்கிய பொதி தவறி விழுந்திருந்தாலும் அவற்றை கொண்டு சென்றவர்கள் அந்த ஆவண பொதிகளை வீதியில் இருந்து அப்புறப்படுத்தாமல் விட்டு சென்றமை தொடர்பில் பலரும் விசனம் தெரிவித்திருந்தனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap