வட மாகாணத்தின் கரைச்சி, ஒட்டுசுட்டான் ஆகிய பிரதேசங்களில் 150 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளை விடுவிப்பதற்கான ஆவணங்கள் இராணுவத்தினரால் கிளிநொச்சி மற்றும் முலைத்தீவு மாவட்ட செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான நிகழ்வு இன்று(18) கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் நடைபெற்றுள்ளது.
இராணுவத்தினரால் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த காணியின் ஒரு பகுதியே இவ்வாறு இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவின் தலைமையில் விடுவிக்கப்பட்டுள்ளது. #கரைச்சி #ஒட்டுசுட்டான் #காணி #விடுவிப்பு #சவேந்திரசில்வா
Spread the love
Add Comment