பிரதான செய்திகள் விளையாட்டு

குலாம் போடிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை


தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான குலாம் போடிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

46 வயதான குலாம் போடி 2 ஒருநாள் மற்றும் ஒரே ஒரு 20 ஓவர் போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் சூதாட்ட வழக்கில் சிக்கியமை தொடர்பிலேயே இவ்வாறு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2015-ம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நநடைபெற்ற உள்ளூர் போட்டியின் போது அவர் சூதாட்டத்தில் சிக்கியிருந்தமைக்காக அவருக்கு 20 வருடம் தடை விதித்து தென்னாபிரிக்க கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இது தொடர்பான வழக்கு பிரிட்டோரியாவில் உள்ள குற்றவியல் நீதிமன்றில் நடைபெற்ற நிலையில் அவர் மீது 8 விதமான ஊழல் முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டதனையடுத்து இவ்வாறு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது #குலாம்போடி  #சிறைத்தண்டனை  #தென்னாபிரிக்க

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.