இந்தியா பிரதான செய்திகள்

தந்தையை பராமரிக்காத மகளிடமிருந்து 3.80 கோடி ரூபா சொத்து பறித்து மீண்டும் தந்தையிடம்

80 வயது தந்தையை பராமரிக்காத கல்லூரி பேராசிரியை ஒருவரிடமிருந்து 3.80 கோடி ரூபா மதிப்புள்ள சொத்துக்கள் பறிக்கப்பட்டு மீண்டும் அவரது தந்தையான முதியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ளது கரடிக்கல் கிராமத்தை சேர்ந்த 80 வயதாக வைரவன் கண்ராக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றிருந்தார்.
இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் என்னும் நிலையில் இதில் 2 மகன்களும் இறந்து விட்டனர். இதனால் தனது மகளான ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியையுடன் வைரவன் வசித்து வந்தார்.

சில ஆண்டுகள் நன்றாக மகள் பராமரித்து வந்தமையினால் வைரவன் தனது பெயரில் உள்ள 3.80 கோடி ரூபா மதிப்பிலான 6.37 ஏக்கர் நிலத்தை தனது மகள் பெயருக்கு மாற்றி கொடுத்துள்ளார்

சொத்து கை மாறியதும் வைரவனை தனது மகள் சரியாக கவனிக்கவில்லை என்பதனால் மனமுடைந்த வைரவன் மகளிடம் இருந்து பிரிந்து தனது இடத்தில் சிறிய வீட்டை கட்டி அங்கு வைரவன் வசித்து வந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அவரது மகள் புல்டோசர் மூலம் வீட்டை இடித்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த வைரவன் கிராமமக்கள் ஆலோசனையின்படி திருமங்கலம் ஆர்.டி.ஓ. முருகேசனை சந்தித்து முறைப்பாடு வழங்கியதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது இருவருக்குமிடையில் சமரசம் ஏற்படவில்லை.

இதையடுத்து பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தின் கீழ் மகளுக்கு எழுதிக் கொடுத்த சொத்துக்களை பறித்து மீண்டும் வைரவனுக்கு அந்த சொத்துக்கள் நிபந்தனைகளுடன் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது  #தந்தை #பராமரிக்காத #சொத்து

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.