இந்தியா சினிமா பிரதான செய்திகள்

மோகன் லாலுக்கு அழைப்பாணை

யானை தந்தங்களை வைத்திருந்த வழக்கு தொடர்பில் பிரபல நடிகர் மோகன்லாலுக்கு பெரும்பாவூர் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பி உள்ளது.

கேரள மாநிலம் தேவாராவில் உள்ள நடிகர் மோகன்லால் வீட்டில் கடந்த 2012-ம் ஆண்டு வருமானவரி துறையினர் சோதனை நடத்தி 4 யானை தந்தங்களை கைப்பற்றியிருந்தனர். இது தொடர்பாக மோகன்லால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. யானை தந்தங்களை திருப்பி ஒப்படைக்கும்படி அரசிடம் மோகன்லால் கோரிக்கை விடுத்தார்.

வனத்துறை சட்டப்படி யானை தந்தங்களை வீட்டில் வைக்க தடை உள்ள போதிலும் அப்போதைய வனத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் சட்டத்தில் திருத்தம் செய்து யானை தந்தங்களை மோகன்லாலிடம் திருப்பி கொடுத்ததாக கூறப்படுகின்ற நிலையில் அதனை எதிர்த்து நீதிமன்றில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.

7 வருடத்துக்கு பின்னர் இந்த வழக்கு தொடர்பில் கொட நாடு வனத்துறையினர் பெரும்பாவூர் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய கோரி கேரள நீதிமன்றில் மோகன்லால் மனு தாக்கல் செய்தார். அதில் தந்தங்கள் வைத்துக்கொள்ள தன்னிடம் லைசென்ஸ் உள்ளது என்றும், தனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிலையில் பெரும்பாவூர் நீதிமன்றம் டிசம்பர் 6ம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மோகன்லாலுக்கு அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டு உள்ளது. இந்த வழக்கில் தொடர்புடையை மேலும் 3 பேருக்கும் அழைப்பாணை அனுப்பப்பட்டு உள்ளது. #மோகன்லால்  #அழைப்பாணை #யானைதந்தங்கள்

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.