இந்தியா பிரதான செய்திகள்

டெல்லி அரச பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்….

டெல்லியில் அரச பேருந்துகளில் பெண்கள் டிக்கெட் எடுக்காமல் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. டெல்லியில் அரசு மற்றும் கிளஸ்டர் பேருந்துகளில் ஒக்டோபர் 29-ம் தேதி முதல் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் திட்டம் அமல்படுத்தப்படும் என சுதந்திர தின விழாவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்து இருந்தார். இதன்படி, பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் இன்று முதல் டெல்லியில் அமலுக்கு வந்துள்ளது.

பெண்கள் பயண பற்றுச்சீட்டு  வாங்காமல் இலவசமாக பேருந்துகளில் இன்று தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். டெல்லி அரசின் இந்த திட்டத்திற்கு பெண்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.