சினிமா பிரதான செய்திகள்

விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பிகில் திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் நடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது
சென்னை காவல்நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பெடுத்த இனந்தெரியாத நபர் ஒருவர் விஜய் வீட்டில் குண்டு வைக்கப் பட்டுள்ளதாகவும், அது சிறிது நேரத்தில் வெடித்து சிதறும் எனவும் தெரிவித்து விட்டு அழைப்pபனை துண்டித்துவிட்டார்.

இதையடுத்து நீலாங்கரையில் உள்ள விஜய்யின் வீடு, சாலிகிராமம் அபுசாலி தெருவில் இருக்கும் மற்றொரு வீடு, வடபழனி அருணாசலா ரோட்டில் விஜய்யின் தாய் ஷோபா பெயரில் இருக்கும் திருமண மண்டபம் ஆகிய 3 இடங்களிலும் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

எனினும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை எனவும் அது வெறும் புரளி எனவும் தெரியவந்துள்ளது. மேலும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் போதையில் பேசியதும் கண்டுபிடிக்கப்பட்டது. பிகில் படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரகைளில் போரூர் ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரே மிரட்டல் விடுத்திருப்பது தெரிய வந்துள்ள நிலையில் அவரை கைது செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் #விஜய் #வெடிகுண்டு #மிரட்டல் #பிகில்

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.