ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல்-பாக்தாதி கொல்லப்பட்டதனை உறுதி செய்தி அவ்வமைப்பு புதிய தலைவரை நியமித்துள்ளது.
ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அல்-பக்தாதி, கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்க படையினர் சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் நடத்திய தாக்குதலின் போது சுரங்கம் ஒன்றில் சிக்கிய அவர் தன் உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்து தற்கொலை செய்துகொண்டார் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் பக்தாதி உயிரிழந்ததனை உறுதி செய்துள்ள ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு அபு இப்ராகிம் ஹாஷிமி அல் -குரேஷி என்ற அப்துல்லா குரேஷி என்பவரை புதிய தலைவராக அறிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. #பாக்தாதி #ஐஎஸ்
Add Comment