உலகம் பிரதான செய்திகள்

ஜப்பானில் 500 ஆண்டுகள் பழமையான கோட்டையின் முக்கிய கட்டிங்கள் தீயினால் அழிவு

ஜப்பானில், ஒக்கினவா தீவில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான ஷூரி என்ற கோட்டையின் 7 முக்கிய கட்டிடங்கள் எரிந்து அழிந்துள்ளது. முற்றிலும் மரப்பலகைகளால் கட்டமைக்கப்பட்ட இந்த கோட்டையானது, இரண்டாவது உலகப்போரின்போது முற்றிலும் அழிக்கப்பட்ட போதும் மறுபடியும் கட்டமைக்கப்பட்டு யுனஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாக திகழ்ந்து வந்தது.

இந்த கோட்டையில் நேற்றையதினம் திடீரென தீப்பிடித்ததனால் கோட்டையின் 7 முக்கிய கட்டிடங்கள் எரிந்து அழிந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயணைப்பு படையினர் 10 மணி நேரம் போராடி தீயை அணத்த போதிலும் அந்தக்கோட்டை உருக்குலைந்து போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  #ஜப்பான் #ஷூரி  #பழமையான #தீயினால்  #அழிவு

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.