Home இலங்கை யாழ்.மாநகர சபையின் நகர மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கான வரவேற்புசெலவு 8 லட்சத்து 47 ஆயிரம்

யாழ்.மாநகர சபையின் நகர மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கான வரவேற்புசெலவு 8 லட்சத்து 47 ஆயிரம்

by admin

யாழ்.மாநகர சபையின் நகர மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு வருகை தந்தவர்களை வரவேற்கும் செலவாக 8 லட்சத்து 47 ஆயிரத்து 895 ரூபா 48 சதம் ஏற்பட்டுள்ளதாக யாழ்.மாநகர சபை காணக்கிட்டுள்ளது.  யாழ்.மாநகர சபையின் நகர மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்றது.

குறித்த விழாவுக்கு வருகை தந்தோருக்கான சிற்றூண்டி மற்றும் தண்ணீரிற்காக 2 லட்சத்து 27 ஆயிரத்து 200 ரூபாவும், மதிய போசணமும் அதனுடன் இணைந்த தண்ணீர்ச் செலவிற்காக 4 லட்சத்து 85 ஆயிரத்து 475 ரூபா 48 சதமும், ஏற்பட்டுள்ளது.

அத்துடன் விருந்தினர்களுக்கான மாலை செலவு , மங்கள வாத்திய செலவு , வரவேற்பு நடன செலவு உள்ளிட்ட ஏனைய செலவுகளாக ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 895 ரூபா 48 சதம் ஏற்பட்ட வகையிலேயே மொத்தம் 8 லட்சத்து 47 ஆயிரத்து 895 ரூபா 48 சதம் ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. #யாழ்.மாநகரசபை  #அடிக்கல்நாட்டுவிழா

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More