பிரான்ஸ் நாட்டில் இத்தாலி எல்லையில் பாரவூர்தி ஒன்றினை தடுத்து சோதனை நடத்தியபோது அதனுள் இருந்த பாகிஸ்தான் அகதிகள் 31 பேர் இத்தாலி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரித்தானியவில் ஒரு பாரவூர்தியில் இருந்து வியட்நாமை சேர்ந்த 39 பேர் உடல்கள் மீட்கப்பட்டதனையடுத்து மேற்கத்திய நாடுகளில் அகதிகள் கண்காணிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டில் இத்தாலி எல்லையில் உள்ள நெடுஞ்சாலையில் காவல்துறையினர் தீவிர வாகன பரிசோதனையில் ஈடுபட்டிருந்தபோது ஒரு பாரவூர்தியை தடுத்து சோதனை நடத்தியபோது அதனுள் பாகிஸ்தான் அகதிகள் 31 பேர் பதுங்கி இருப்பதை கண்டுள்ளனர். இதனையடுத்து பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டதுடன் அகதிகள் அனைவரும் இத்தாலி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். #பிரான்ஸ் #பாரவூர்தி #பாகிஸ்தான் #அகதிகள் #கைது
Spread the love
Add Comment