இலங்கை பிரதான செய்திகள்

மூத்த ஊடகவியலாளரின் உடல், மருத்துவ பீடத்திற்கு கையளிப்பு…

தமிழ் பத்திரிகை துறையில் நீண்டகாலமாக பணியாற்றிய மூத்த ஊடகவியலாளர் பி.எஸ்.பெருமாள் என அழைக்கப்படும் சின்னக்கண்ணு பெருமாள் தனது 86ஆவது வயதில் காலமானார்.

இரட்னபுரியில் 1933ஆம் ஆண்டு பிறந்த அவர் மாணவராக இருந்த கால பகுதியிலையே பத்திரிகை துறையில் ஆர்வம் மிகுந்தவராக இருந்தார். வீரகேசரி பத்திரிகையில் உதவி ஆசிரியராக தனது பத்திரிகைத்துறையை ஆரம்பித்தார்.

பின்னர் 1961ஆம் ஆண்டு ஈழநாடு பத்திரிகையில் உதவி ஆசிரியராக தனது பணியினை தொடர்ந்தார். அங்கு சிறிது காலத்திலையே ஈழநாடு வாரமஞ்சரியின் ஆசிரியராக பொறுப்பேற்றார்.

அதன் பின்னரான கால பகுதியில் உதயன் பத்திரிக்கையின் உதவி ஆசிரியராகவும், ஆசிரிய ஆலோசகராகவும் பணிபுரிந்தார்.

55 வருடங்களாக பத்திரிகை துறையில் பணியாற்றிய அவர் தனது 84அவது வயதில் 2017ஆம் ஆண்டு பத்திரிகை துறையில் இருந்து ஓய்வு பெற்றார்.

இந்நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை தனது 86ஆவது வயதில் இறைவனடி சேர்ந்தார். அவரின் இறுதி விருப்பப்படி அவரது உடல் யாழ்.மருத்துவ பீட மாணவர்களின் ஆய்வுக்காக மருத்துவ பீடத்திற்கு கையளிக்கப்பட்டது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.