உலகம் பிரதான செய்திகள்

பாகிஸ்தானில் இந்து மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரத்தின் பின்னர் கொலை

பாகிஸ்தானில் இந்து மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரத்தின் பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது பிரேதபரிசோதனையில் தெரியவந்துள்ளது.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியில் இறுதியாண்டு மருத்துவ படிப்பு படித்து வந்த மாணவி 25 வயதான நிம்ரிதா சாந்தனி என்னும் மாணவியே இவ்வாறு கொல்லப்பட்டள்ளர்h.

இந்து மதத்தை சேர்ந்த இவர் கடந்த செப்டம்பர் மாதம் 16ம் திகதி கல்லூரி விடுதி அறையில் சடலமாக காணப்பட்ட நிலையில் அவர் துப்பட்டா மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்திருந்ததுடன் பிரேத பரிசோதனை அறிக்கையும் அது தற்கொலை என தெரிவித்திருந்தது.

எனினும் ஆனால் நிம்ரிதா சாந்தனி தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பு இல்லை எனவும் இது கொலையாகத்தான் இருக்குமென்றும் மாணவியின் உறவினர்கள் தெரிவித்ததுடன் இந்த விவகாரத்தில் காவல்துறையினர் வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என கூறி போராட்டம் மேற்கொண்டனர்.

அதனை தொடர்ந்து மருத்துவ மாணவியின் உயிழப்பு குறித்து நீதி விசாரணை நடத்த சிந்து மாகாண உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதனையடுத்து நிம்ரிதா சாந்தனியின் உடல் மீண்டும் பிரேதபரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதில் நிம்ரிதா சாந்தினி பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டு அதன் பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதும், தெரியவந்துள்ளது. மருத்துவ மாணவி கொலை செய்யப்பட்டது உறுதியாகியுள்ள நிலையில் கொலையாளி யார் என்பதை கண்டறிய காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.  #பாகிஸ்தான் #இந்துமாணவி   #கொலை

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.