ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில் பொதுஜனபெரமுனவிற்கு எதிராக தேர்தல் வன்முறைகள் சட்டமீறல்கள் குறித்த அதிகளவான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவிற்கு எதிராக 130  முறைப்பாடுகளும், புதிய ஜனநாயக முன்னணிக்கு எதிராக 45 முறைப்பாடுகளும், தேசிய மக்கள் சக்திக்கு எதிராகமூன்று முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக  தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இன்று சட்டவிரோத பிரச்சாரமே அதிகளவில் இடம்பெற்றது இது தொடர்பில் 67 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக 34 முறைப்பாடுகளும், அச்சுறுத்தல் மற்றும் செல்வாக்கு செலுத்த முயலுதல் தொடர்பாக 58 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தேர்தல் வன்முறைகளைகண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.

நான்கு தாக்குதல் சம்பவங்களும் இடம்பெற்றதாக தெரிவித்துள்ள தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் மாத்தறையில்  அதிகமாக 20 முறைப்பாடுகளும், கம்பஹாவில் 16 முறைப்பாடுகளும் புத்தளத்தில் 15 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாகவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.