Home இலங்கை பிரதி இராணுவ பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் நிர்மல் தர்மரத்ன பதவியேற்றார்..

பிரதி இராணுவ பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் நிர்மல் தர்மரத்ன பதவியேற்றார்..

by admin

இலங்கை இராணுவத்தின் பிரதி இராணுவ பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் நிர்மல் தர்மரத்ன நேற்று (22.11.19) காலை ஶ்ரீ ஜயவர்தனபுரவில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்தில் வைத்து சமய அனுஷ்டானங்களுக்கு மத்தியில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

மேலும் இராணுவ அதிகாரிகளுடன் அலுவலகத்துக்கு வருகை தந்த பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி  பெளத்த மகா சங்க தேரர்களின் ஆசிர் வாதத்தை பெற்றுக் கொண்டதுடன் சம்பிரதாய முறைப்படி மங்கள விளக்கினையும் ஏற்றி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து இடம் பெற்ற ‘செத் பிரித்’ மத வழிபாட்டின் பின்னர் மேஜர் ஜெனரல் நிர்மல் தர்மரத்ன உத்தியோக பூர்வமாக தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும், இந்த நிகழ்வானது அனைத்து பதவி நிலை அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் புதிய அலுவலகத்தில் இடம்பெற்றது.

கஜபா படையணியை சேர்ந்த மேஜர் ஜெனரல் நிர்மல் தர்மரத்ன இப் பதவிக்கு நியமிக்க படும் முன்னர் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதியாக கடமையாற்றினார். இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று சென்ற மேஜர் ஜெனரல் குமுது பெரேராவுக்கு பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறுப்பிடத்தக்க விடயமாகும்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More