அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியுதீன் பயணித்த வாகனத்தின் மீது கல்லெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
புத்தளம், முந்தல், கனமூல பகுதியில் மக்கள் சந்திப்பை நடத்திவிட்டு இன்று மாலை திரும்பியபோது அவர்கள் சென்ற வாகனத் தொடரணி மீது கல்லெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் சம்பவத்தில் தமது கட்சியைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளார் என்று முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
முந்தல் காவற்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியதுடன் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love
Add Comment