உலகம் பிரதான செய்திகள்

கொங்கோ விமான விபத்தில் 18 பேர் பலி

கொங்கோ நாட்டின் கிழக்கு பகுதியில் நேற்றையதினம் 19 பேருடன் சென்ற சிறியரக விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியதில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். வடக்கு கிவு மாகாணத்துக்குட்பட்ட கோமா நகரில் இருந்து பேனி நகரை நோக்கி சென்ற தனியாருக்கு சொந்தமான சிறியரக விமானமே இவ்வாறு புறப்பட்ட சில நிமிடங்களில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து, கீழே விழுந்து நொருங்கியுள்ளது

இந்த விபத்தில் 18 பேரின் உடல்களை மீட்பு படையினர் கண்டெடுத்துள்ள நிலையில் அதில் சென்றவர்களில் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமானம் கீழே விழுந்த குடியிருப்பு பகுதியில் இருந்த சிலரும் இந்த விபத்தில் உயிரிழந்ததாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது  கொங்கோ விமான விபத்தில் 18 பேர் பலி#கொங்கோ  #விமானவிபத்து

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.