சினிமா பிரதான செய்திகள்

பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சு – பாக்யராஜ் மீது நடவடிக்கை

Actor Director K Bhagyaraj at the Sathuranga Vettai Audio Launch

பட விழா ஒன்றில் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த  நடிகரும் இயக்குனருமான  பாக்யராஜுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. சமீபத்தில் நடைபெற்ற ‘கருத்துக்களை பதிவு செய்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பாக்யராஜ், பொள்ளாச்சி விவகாரத்தில் தவறு நடக்க பசங்க மட்டும் காரணம் இல்லை. உங்கள் பலவீனத்தை அவன் சரியாக பயன்படுத்திக்கொண்டான். அவன் செய்தது பெரிய தவறு என்றால், அந்த வாய்ப்பை உருவாக்கி கொடுத்துவிட்டீர்கள், அதுதான் பெரிய தவறு.

ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது என கூறிய பாக்யராஜ், பெண்கள் கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும். அவர்களுக்கு சுய கட்டுப்பாடு வேண்டும். ஒரு பெண்ணுக்கு தந்தை பாதுகாப்பிற்குத்தான் கைபேசி வாங்கி கொடுக்கிறார். ஆனால் பெண்கள் அதை தவறாக பயன்படுத்துகிறார்கள்’ என பேசியிருந்தார்.

பாக்யராஜின் இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக மகளிர் ஆணையகத்துக்கு ஆந்திர மகளிர் ஆணையகத் தலைவி வசிரெட்டி பத்மா கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் ஒரு சில சம்பவங்களை வைத்து ஒட்டு மொத்த பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் பாக்யராஜ் பேசியிருப்பதாகவும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால்   பாக்யராஜ் மீது நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது  #பெண்கள்   #பாக்யராஜ்  #பொள்ளாச்சி

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.