உலகம் பிரதான செய்திகள்

லண்டன் பிரிட்ஜ் பகுதியில் கத்திக்குத்து – ஐவர் காயம்


லண்டன் பிரிட்ஜ் பகுதியில் பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  பொதுமகன் ஒருவர் சுட்டவரை மடக்கிப் பிடித்துள்ள நிலையில் அங்கே சென்ற ஆயுத காவல்துறையினர் கத்தி வைத்திருந்த நபர் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டதில் தாக்குதல் நடத்தியவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிக்கு அம்புலன்ஸ்கள் அழைக்கப்பட்டுள்ளதாகவும் லண்டன் பிரிட்ஜ் புகையிரத நிலையம் மூடப்பட்டுள்ளதனால் அங்கு புகையிரதங்கள் தரிக்காது என்பதனால் பயணிகள் மாற்றுவழியில் பயணிக்குமாறும் கேட்கப்பட்டுள்ளனர்.  #லண்டன்பிரிட்ஜ்   #கத்திக்குத்து #காயம்

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link