இலங்கை பிரதான செய்திகள்

தென்பகுதியை சேர்ந்த இருவர் உள்ளிட்ட ஐவர் ஹெரோயினுடன் கைது….

ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றசாட்டில் தென்பகுதியை சேர்ந்த இருவர் உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து 7 கிராம் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.

யாழ்.குருநகர் பகுதியில் ஹெரோயின் போதை பொருளை பாவனைக்கு உட்படுத்துகிறார்கள் என யாழ்ப்பாண காவற்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவற்துறையினர் போதை பொருளை பாவனைக்கு உட்படுத்திய நிலையில் மூவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 கிராம் போதைப்பொருளையும் மீட்டனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையின் போது, அவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் யாழ்.புகையிரத நிலையத்திற்கு அருகில் வைத்து தென்னிலங்கையை சேர்ந்த இருவரை காவற்துறையினர் கைது செய்தனர். அதில் ஒருவரிடமிருந்து 5 கிராம் ஹெரோயினும், மற்றவரிடமிருந்து 1 கிராமும் மீட்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட ஐவரையும் , அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட 7 கிராம் ஹீரோயினையும் காவற்துறையினர் நீதிமன்றில் பாரப்படுத்தினர். அதனை அடுத்து நடைபெற்ற விசாரணைகளின் பின்னர் ஐவரையும் எதிர்வரும் 5ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் உத்தரவிட்டார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap