இலங்கை பிரதான செய்திகள்

மண்டைதீவுச் சந்தி காவலரனில் காவற்துறை உத்தியோகத்தர் மரணம்..

மண்டைதீவுச் சந்தி காவற்துறை காவலரனில் நேற்றிரவு கடமையிலிருந்த காவற்துறை  உத்தியோகத்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காவற்துறை உத்தியோகத்தரின் உயிரிழப்புத் தொடர்பில் பல்வேறுபட்ட சந்தேகங்கள் எழும்நிலையில் அவர் மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் என காவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணம் காவற்துறை  நிலையத்தில் கடமையாற்றும் அநுராதபுரத்தைச் சேர்ந்த 40 வயதுடைய காமினி என்ற உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்தார். யாழ்ப்பாணம் மண்டைதீவு சந்தியில் அமைந்துள்ள காவற்துறை  காவலரனுக்கு நேற்று வெள்ளிக்கிழமை மாலை இரவு நேரக் கடமைக்காக காவற்துறை  உத்தியோகத்தர் சென்றிருந்தார். அவர் அங்கு நள்ளிரவு உறக்கத்துக்குச் சென்றுள்ளார்.

எனினும் இன்று சனிக்கிழமை காலை அவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் என்று காவற்துறையினர் தெரிவித்தனர். சம்பவ தொடர்பில் ஊர்காவற்றுறை காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap