இலங்கை பிரதான செய்திகள்

எதிர்க்கட்சித்தலைவராக சஜித் பிரேமதாஸ பிரேரிக்கப்பட்டுள்ளார்

ஐக்கியதேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ எதிர்க்கட்சி;த்தலைவராக பிரேரிக்கப்பட்டுள்ளார் என ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தனது உத்தியோக பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.

ஐக்கியதேசிய முன்னணித் தலைவர்களுக்கும் ஐக்கியதேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து இந்த உடன்பாடு எட்டப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் இந்த உடன்பாடு குறித்து சபாநாயகர் கருஜெயசூரிய , ஐக்கியதேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோருக்குமிடையிலும் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது  #எதிர்க்கட்சித்தலைவர் #சஜித்பிரேமதாஸ    #கருஜெயசூரிய  #ரணில்விக்கிரமசிங்க

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.