இலங்கை பிரதான செய்திகள்

சுவிஸ் தூதரக அதிகாரி சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டார்..

நவம்பர் 25 ஆம் திகதி கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் கொழும்பிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் உள்நாட்டில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஊழியர், கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியிடம் இரண்டாவது நாளாக இன்று (10) முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

நவம்பர் 25 ஆம் திகதி கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் கொழும்பிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் உள்நாட்டில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஊழியர், குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மூன்றாவது நாளாக இன்று (10) ஆஜராகி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

குறித்த சுவிஸ் தூதரக அதிகாரி கடந்த 25 ஆம் திகதி தனது அலுவலக பணிகளை நிறைவு செய்து வீடு திரும்பும் போது கடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. அதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்தது.

அத்துடன், சம்பவம் தொடர்பில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விடயங்களை முன்வைத்தனர்.

அதனையடுத்து, குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகி குறித்த அதிகாரி வாக்குமூலம் வழங்க வேண்டும் என சுவிஸ் தூதரகத்துக்கு நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், கடத்தப்பட்டதாக கூறப்படும் குறித்த சுவிஸ் தூதரக அதிகாரி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நேற்று முன்தினம் (08) இரவு முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கினார்.

அத்துடன், குறித்த பெண் ஊழியர், கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியிடம் நேற்று (09) பிற்பகல் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கினார்.

இதனையடுத்து, இன்று (10) குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு சென்ற குறித்த ஊழியர் சுமார் 4 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

5 மணி நேர வாக்குமூலப் பதிவின் பின், சுவிஸ் பெண் அதிகாரி வெளியேறினார்…

Dec 10, 2019 @ 08:27

சுவிட்சர்லாந்து பெண் அதிகாரி  இன்று காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி அங்கிருந்து வௌியேறியுள்ளார். அவரிடம் இன்று 4 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.