தமிழக திரைப்பட இயக்குநர் மு. களஞ்சியம் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. மாவீரர் நாளை முன்னிட்டு அண்மையில் யாழ்ப்பாணம் சென்றிருந்த களஞ்சியம் அங்கிருந்து கொழும்பு திரும்பும் போது தன்னை இலங்கை ராணுவம் தாக்கியதாக தெரிவித்திருந்தார்.
மேலும் உங்க தலைவர் சீமானா? புலிகள் இயக்கத்தை உயிர்ப்பிக்கத்தான் வந்துள்ளீர்களா? என கேட்டு தான் தாக்கப்பட்டதாகவும் களஞ்சியம் தெரிவித்திருந்தார். எனினும் இத்தாக்குதல் சம்பவத்தை மறுத்துள்ள இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் சுமித் அத்தபத்து இப்படியான ஒரு சம்பவம் நடைபெறவில்லை எனத் தெரிவித்துள்ளார். #களஞ்சியம் #தாக்குதல் #ராணுவம் #மாவீரர் #யாழ்ப்பாணம்
Spread the love
Add Comment