3 கிராம் நிறையுடைய உயிர்க்கொல்லி போதைப்பொருளான ஹெரோயினை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் அச்சுவேலியில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட சிறப்பு குற்றத்தடுப்புப் பிரிவு காவற்துறையினர் இன்று நண்பகல் நடத்திய சுற்றுக்காவல் நடவடிக்கையின் போது, சந்தேகநபர் கைது செய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. சுமார் 3 லட்சம் ரூபா பெறுமதியான 3 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாகப் காவற்துறையினர் தெரிவித்தனர்.
இந்த நிலையில் 22 வயதுடைய சந்தேகநபர் அச்சுவேலி காவல் நிலையத்தில் யாழ்ப்பாணம் மாவட்ட சிறப்பு குற்றத்தடுப்புக் காவற்துறையினரால் முற்படுத்தப்பட்டார். அவர் நாளை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என அச்சுவேலிக் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Spread the love
Add Comment