கிழக்கு மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ள அனுராதா யஹம்பத் திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண அலுவலகத்தில் கடமைகளை இன்று (12.12.19) பொறுப்பேற்றுக்கொண்டார்.
கடந்த 4 ஆம் திகதி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவினால் கிழக்கு மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்ட நிலையிலே இன்றைய தினம் அனுராதா யஹம்பத் உத்தியோக பூர்வமாக கடமைகளை பெறுப்பேற்றுக்கொண்டார்.
கிழக்கு மாகாண சபையின் முன்னால் அமைச்சர் ஆரியவதி கலப்பதி, திணைக்கள தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.
Add Comment