இந்தியா பிரதான செய்திகள் விளையாட்டு

சச்சின் தேடிய குருபிரசாத்

கிரிக்கெட் உலகின் ஜாம்பவனான சச்சின் டெண்டுல்கரால் தேடப்பட்டு வந்த நபர் சென்னை பெரம்பூரில் வசிக்கும் குருபிரசாத் என தெரியவந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சச்சின் டெண்டுல்கர். தனது துடுப்பாட்டத் திறமையால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்திழுத்தவர்.

இந்தநிலையில் செச்சின் டெண்டுல்கர் அவரது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்ட குறுந்தகவல் ஒன்று இணையவாசிகள் மத்தியில் பிரபலம் அடைந்திருந்தது.

‘எதிர்பாராத சந்திப்புகள் சில சமயம் மறக்க முடியாத தருணங்களாக மாறுகின்றன, டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கான நான் ஒருமுறை சென்னை வந்த போது நுங்கம்பாக்கம் தாஜ் கோரமண்டல் விடுதி பணியாளர் ஒருவரை சந்தித்தேன்.

கிரிக்கெட் ஆட்டத்தின்போது முழங்கைகளில் அணியும் பாதுகாப்பு பட்டை (எல்போ பேட்) குறித்து அந்த விடுதி பணியாளர் அப்போது எனக்கு ஆலோசனை கூறினார். அவர் கூறிய பின்னர் உடனடியாக பட்டையின் வடிவத்தை மாற்றினேன். அவரை மீண்டும் சந்திக்க ஆசைப்படுகிறேன். அவரை கண்டுபிடிக்க எனக்கு நீங்கள் அனைவரும் உதவ வேண்டும்’ என டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

 2001-ம் ஆண்டு இந்தியா-அவுஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி சென்னையில் நடந்தபோது சச்சின் டெண்டுல்கர் நுங்கம்பாக்கம் தாஜ் கோரமண்டல் விடுதியில் தங்கியிருந்தபோது அவருக்கு காபி பரிமாற வந்த விடுதி பணியாளர் அளித்த ஆலோசனை மிகப்பெரிய பலனை அளித்தது.

2001-ம் ஆண்டு மார்ச் 18 முதல் 21-ம் திகதிவரை நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க அந்தப் போட்டித்தொடரில் முதல் இன்னிங்சில் சதம் அடித்திருந்த சச்சின் 126 ஓட்டங்களை குவித்து இந்திய அணி 501 ஓட்டங்களுடன் வெற்றிவாகை சூடுவதற்கு களம் அமைத்து தந்தார்.

இந்நிலையில், சச்சின் சந்திக்க விரும்பிய நபர் சென்னை பெரம்பூரில் வசிக்கும் குருபிரசாத் என்று தற்போது தெரியவந்துள்ளது. ‘சச்சினுக்கு அன்று நான் ஆலோசனை கூறிய சம்பவம் எனது வாழ்நாளில் மறக்க முடியாத அற்புதமான தருணமாகும். என்னை அவர் சந்திக்க விரும்புவதை அறிந்து நான் மிக்க மகிச்சி அடைந்துள்ளேன்’ என குருபிரசாத் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்   #சச்சின்டெண்டுல்கர்  #குருபிரசாத் #கிரிக்கெட்  #சென்னை

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.