சிரியாவில் போராளிக் குழுக்களின் கடைசி கோட்டையாக விளங்கும் பகுதியில் அரச படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் 23 பொதுமக்கள் பலியாகியுள்ளனர்.
சிரியாவில் கடந்த 2011ம் ஆண்டிலிருந்து கிளர்ச்சியாளர்களுக்கும் அரசபடைகளுக்கும் இடையே நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் இதுவரை 3 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் கூடுதலான மக்கள் பலியாகி உள்ளதுடன் லட்சக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளை விட்டு வேறு இடங்களை நோக்கி இடம்பெயாந்துள்ளனர்.
சிரியாவின் இத்லிப் பகுதியில் அல் கொய்தா இயக்கத்துடன் தொடர்புடைய போராளி குழுக்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்ற நிலையில் அந்த பகுதியை தங்களது கட்டுக்குள் கொண்டு வருவதற்காக என சிரிய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
அரசு படைகளின் தாக்குதலை தவிர்க்கும் வகையில் ரஸ்யா கடந்த ஓகஸ்ட் இறுதியில் போர்நிறுத்த ஒப்பந்தம் செய்தது. ஆனால், இந்த ஒப்பந்தத்திற்கு பின்னரும் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்படுகின்ற நிலையில் இதன்போது 250 பேர் வரை பலியாகி உள்ளனர்.
இந்நிலையில், பிரித்தானியாவினை அடிப்படையாக கொண்ட சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள செய்தியில், அரசு படைகள் நேற்று நடத்திய வான்வழி தாக்குதலில் பொதுமக்கள் 23 பேர் பலியாகி உள்ளதுடன் 30 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவித்துள்ளது. போராளிக் குழுக்களின் கடைசி கோட்டையாக கருதப்படும் பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. #சிரியா #அரசபடைகளின் , #வான்வழிதாக்குதல்
Add Comment