இலங்கை பிரதான செய்திகள்

ஒளிவு மறைவாக யாழ் சிறைச்சாலை நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையினை ஏற்றுக்கொள்ள முடியாது

யாருக்கும் தெரியாமல் ஒளிவு மறைவாக யாழ்ப்பாண சிறைச்சாலை நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையினை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்
 இன்றைய தினம் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு முன்னால் பௌத்த சின்னங்கள் அடங்கிய சிலைகள் வைப்பதற்கு சிறைச்சாலை நிர்வாகம் முயன்றபோதும் பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மேற்கொண்ட எதிர்ப்பின் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தமிழ் பிரதேசங்களில் இவ்வாறு யாருக்கும் தெரியாமல் பௌத்த சின்னங்களை இரவோடிரவாக வைப்பதற்கு சிறைச்சாலை நிர்வாகம் எடுத்த முயற்சியினை ஏற்றுக்கொள்ள முடியாது இது நிறுத்தப்பட வேண்டிய விடயம். எனவே இது தொடர்பில் நான் சிறைச்சாலை ஆணையாளர் மற்றும் சம்பந்தப்பட்ட நிதி அமைச்சருடன் இதைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன்.
 குறிப்பாக தமிழர் பிரதேசங்களில் இவ்வாறான செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும் என்பது எமது நீண்டகால கோரிக்கை அத்தோடு இது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் அவர்களுடனும் நான் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி இதனை நிரந்தரமாக நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கையை முன்னெடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்  #ஒளிவுமறைவாக  #யாழ்சிறைச்சாலை  #மாவைசேனாதிராஜா #பௌத்தசின்னங்கள்

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.