இலங்கை பிரதான செய்திகள்

சுனாமி அனர்த்தத்தின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் :

பாறுக் ஷிஹான்

கடந்த 2004 டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலையினால் உயிரிழந்த உறவினர்களின் 15 ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் வியாழக்கிழமை ( 26)ஆம் திகதி கல்முனையில் நடைபெற்றது.

இதற்கமைய கல்முனை கடற்கரை பள்ளிவாசலில் காலை 9.00 மணியளவில் விஷேட துஆ பிராத்தனை இடம்பெற்றது.அத்துடன் சூரியகிரகணத் தொழுகை கல்முனை முஹ்யித்தீன் ஜூம்ஆ பெரிய பள்ளிவாசலில்   காலை 8.30 மணிக்கு  நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 2004 இல் ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலையினால் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பகுதி
அதிக உயிரிழப்புக்களைச் சந்தித்த பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் சுனாமி அனர்த்தத்தின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் :
´சுனாமி´ அனர்த்தம் இடம் பெற்று இன்று வியாழக்கிழமை (26) 15 வருடங்கள் ஆகின்றன நிலையில், தேசிய பாதுகாப்புத் தினம் நாடு முழுவதிலும் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்திலும் சுனாமி நினைவேந்தல் நிகழ்வு இடம் பெற்றது.மன்னார் கலை இலக்கிய நற்பனி மன்றத்தின் ஏற்பாட்டில்,அதன் இயக்குனர் மேகன்ராஜ் தலைமையில் மன்னார் பிரதான பாலத்தடியில் நினைவேந்தல் நிகழ்வு இடம் பெற்றது.
இதன் போது சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு காலை 9 மணியளவில் மௌன அஞ்சலியுடன் மலர் தூவி,தீபம் ஏற்றி நினைவு கூறப்பட்டனர்.
குறித்த நினைவேந்தல் நிகழ்வில் மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன்,சமூக ஆர்வலர்கள்,பொது மககள் என பலர் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
சுனாமியில் இறந்தவர்களை நினைவுக்கூர்ந்த மலையக மக்கள்

(க.கிஷாந்தன்)

சுனாமி ஆழிப்பேரலை இடம்பெற்று 26.12.2019 அன்றுடன் 15 ஆண்டு நிறைவடைவதை நினைவு கூரும் வகையில் உயிரிழந்த உறவுகளுக்கு மலையக மக்கள் தமது அஞ்சலியை செலுத்தினர். கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி இலங்கையின் வரலாற்றில் மிகவும் துயரகரமான நிகழ்வாக காலை 9.25க்கு ஆழி பேரலை அனர்த்தம் இடம்பெற்றது. இவ் அனர்த்தத்தில் உயிர்நீத்த இலங்கை உறவுகளுக்கு தமது அஞ்சலியை மலையக மக்களும் செலுத்தினர்.

அட்டன் பொலிஸார், நகர வர்த்தகர்கள் மற்றும் அட்டன் டிக்கோயா நகர சபையின் ஏற்பாட்டில் அட்டன் புத்தர் சிலைக்கு முன்னால் இடம்பெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளில் அட்டன் நகரில் உள்ள வங்கி ஊழியர்கள், நகர வர்த்தகர்கள், சாரதிகள் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பொது மக்கள், அட்டன் டிக்கோயா நகர சபையின் உப தலைவர் பாமிஸ், உறுப்பினர்கள் என அனைவரும் இதில் கலந்துக்கொண்டனர். #சுனாமி  #நினைவுதினநிகழ்வுகள் #கல்முனை#மன்னார் #மலையகம்

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.