Home உலகம் உலகின் பிரபலமான இளம்பெண்ணாக மலாலா ஐ.நாவினால் தெரிவு

உலகின் பிரபலமான இளம்பெண்ணாக மலாலா ஐ.நாவினால் தெரிவு

by admin

கடந்த 10 ஆண்டுகளில் உலகின் மிகவும் பிரபலமான இளம்பெண்ணாக பாகிஸ்தானை சேர்ந்த மலாலா யூசுப்சாயைதெரிவு செய்து ஐ.நா கௌரவித்துள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு பெண்களின் கல்விக்காக போராடிய மலாலா தலீபான் பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கிலக்காகி காயங்களுடன் உயிர் தப்பியிருந்தார்.

அதன்பின்னர் அவர் சர்வதேச அளவில் பெண்களின் கல்வி உரிமைக்காக குரல் கொடுக்க தொடங்கினார். 2014-ம் ஆண்டு அவருக்கும், இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்திக்கும் கூட்டாக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 2017-ம் ஆண்டு ஐ.நா.வின் அமைதிக்கான தூதரானார். மலாலா யூசுப்சாயின் அயராத உழைப்பு, கடந்த 10 ஆண்டுகளில், உலகின் மிகவும் பிரபலமான இளம்பெண்ணாக அவரை உருவாக்கி உள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

 

இதேவேளை கடந்த 10 ஆண்டுகளில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகளாக, ஹைதி நிலநடுக்கம் (2010), சிரிய உள்நாட்டு போர் ஆரம்பம்; (2011), பெண்களின் கல்விக்கு ஆதரவாக மலாலாவின் பணிகள் (2012), எபோலா வைரஸ் தாக்குதல் (2014), பருவநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தம் ஏற்பு (2015) ஆகியவற்றை ஐ.நா. குறிப்பிட்டுள்ளது  #பிரபலமான  #இளம்பெண்  #மலாலா  #ஐ.நா

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More