Home இலங்கை “நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிப் பெற அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்”

“நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிப் பெற அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்”

by admin


பரந்த கூட்டணி மூலம் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட தயாராக உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நீர்க்கொழும்பு பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு  கருத்து தெரிவித்த அவர், பொதுத் தேர்தலில் வெற்றிப் பெறுவதே தமது அடுத்த சவாலாகும் எனக் குறிப்பிட்டார். அது இலகுவான செயற்பாடு அல்ல என்றாலும், குறைப்பாடுகளை நிவர்த்தி செய்துக் கொண்டு முன்னோக்கி செல்ல எதிர்ப்பார்ப்பதாக வும் அவர் இதன்போது தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலை காட்டிலும் இருமடங்கு பிரச்சாரங்களை பொதுத் தேர்தலில் மேற்கொள்ள தயாராக உள்ளதாக குறிப்பிட்ட  சஜித் பிரேமதாக, நாடு முழுவதும் சென்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆசனங்களை வெற்றிக் கொள்வதற்கு தன்னால் இயன்றளவு அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாகவும்   தெரிவித்தார்.

பின்னடைவின் பின்னர் புதிய வெற்றிகரமான பயணத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் அனைவரும் இணைந்து பரந்த கூட்டணி ஒன்றை கட்டியெழுப்ப வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாக  வலியுறுத்தி உள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More