இலங்கை உலகம்

இலங்கையர்கள் 7 பேர் உட்பட 66 பேர் நைஜீரியாவில் கைது…

சட்டவிரோத எரிபொருள் மோசடி தொடர்பில் 7 இலங்கையர்கள் உட்பட 66 பேர் நைஜீரியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். நைஜீரியா கடற்படையினர் கடந்த மாதத்தில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சந்தேகநபர்களுக்கிடையில் 7 இலங்கையர்கள், 57 நைஜீரிய பிரஜைகள் மற்றும் கானா நாட்டு பிரஜைகள் இருவர் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது 7 படகுகள் கடற்படையால் பொறுப்பேற்கப்பட்டுள்ள நிலையில் அவர்களால் திட்டமிடப்பட்டிருந்த பாரியளவான எரிபொருள் மோசடி வெற்றிகரமாக இடம்பெற்றிருந்தால் எரிபொருள் தொழிற்துறைக்கு பாரிய நட்டம் ஏற்பட்டிருக்க வாய்ப்பிருந்ததாக நைஜீரியா அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.