இலங்கைக் குடியுரிமை அல்லாத ஏனைய நாடுகளின் பிரஜைகள் இலங்கைக்கு பயணிப்பதற்கான 1 மாதகால சுற்றுலா விசா இலவசம் என்ற நடைமுறை தற்போது நடைமுறையில் உள்ளது. குறிப்பாக ஐரோப்ப்பா, வட அமெரிக்கா, அவுஸ்ரேலிய நாடுகள் உள்ளிட்ட பல நாட்டுப் பிரஜைகளுக்கு விசா கட்டணம் அறவிடப்படமாட்டாது என அறிழவிக்கப்பட்டு இருந்தது.
எனினும் ETA விசாவை பெற்றுக்கொள்வதற்கான இணையத்தை கூகுளில் தேடும் போது பல இணைய இணைப்புகள் காணப்படுகின்றன. அதில்
என்ற இணைப்பில் விசாவுக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க முற்படும் போது $59.00 கட்டணம் கோரப்படுகிறது.
எனினும் http://www.eta.gov.lk/slvisa/ என்ற இணைப்பிற்கு சென்று விசா வண்ணப்த்தை சமர்ப்பிக்கும் போது கட்டணம் 0 (பூச்சியம்) என வருகிறது.
இது குறித்து பல்வேறு குழப்பங்கள் நிலவுவதனால் குடிவரவு குடியகல்வு திணைக்களமும், வெளிநாட்டு அமைச்சும் கவனம் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
Add Comment