Home இலங்கை மாணவர்கள் வாழ்க்கை உங்களுக்கு விளையாட்டா? யாழ் பல்கலைக்கழக கல்லூரி மாணவர்கள் கேள்வி…

மாணவர்கள் வாழ்க்கை உங்களுக்கு விளையாட்டா? யாழ் பல்கலைக்கழக கல்லூரி மாணவர்கள் கேள்வி…

by admin

யாழ்பாணம் பல்கலைக்கழக கல்லூரி மாணவர்கள் இன்றையதினம் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். பல்கலைக்கழக கல்லூரியினை மூடப் போவதாக தகவல் வெளியாகியதாக குறிப்பிட்டே மாணவர்கள் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்,
மாணவர்கள் வாழ்க்கை உங்களுக்கு விளையாட்டா?
மாணவர்களின் எதிர்காலத்தை உறுதி செய்.
பல்கலைக்கழக கல்லூரி நீடிக்குமா?
நீதி வேண்டும் கல்வி கற்க நீதி வேண்டும்.
என போன்ற பதாதைகளை தாங்கியவாறு தமது போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது குறிப்பிட சில மாணவர்கள் மாத்திரம் யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரி பணிப்பாளரை சந்தித்து கதைத்ததன் பின்பு போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More