இலங்கை பிரதான செய்திகள்

கிளிநொச்சியில் 24 வயது பெண் அவரது கணவரால் வெட்டிக் கொலை…

கிளிநொச்சியில் 24 வயது பெண் அவரது கணவரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், கொலை செய்த கணவரும் தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக காவற்துறையினர்  தெரிவித்துள்ளனர்.

தற்கொலைக்கு முயன்ற கணவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் தற்போது சிகிச்சை பெற்ற வருவதாக காவற்துறையினர்  மேலும் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று (25) அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி தர்மபுரம் காவற்துறைப் பிரிவிற்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கிளிநொச்சி மயில்வாகனபுரம் பகுதியை சேர்ந்த சுகந்தன் சகுந்தலா என்ற 24 வயதுடைய பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார். சுகந்தன் என்பவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் காவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap