இலங்கை பிரதான செய்திகள்

கொழும்பு – யாழ்ப்பாண உள்ளக பயணிகள் விமான சேவை ஆரம்பம்…

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான உள்ளக பயணிகள் விமான சேவை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ATR 72 ரக விமானம் இதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் ஒரு தடவையில் 70 பேர் பயணிக்க முடியும். திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இந்த விமான சேவை இடம்பெறவுள்ளது.

கொழும்பு – இரத்மலானையிலிருந்து காலை 7.30-க்கு பயணத்தை ஆரம்பிக்கும் விமானம் காலை 8.30-க்கு யாழ்ப்பாணம் விமான நிலையத்தை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து காலை 9.30-க்கு இரத்மலானையை நோக்கி விமானம் மீண்டும் பயணிக்கும். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான விமான சேவைக்கு 7500 ரூபா அறவிடப்படுகிறது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.