சிலாவத்தை பகுதியில் மோட்டார் குண்டு வெடித்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் இரும்பு வர்த்தகரான 42 வயதான ஒருவரே படுகாயமடைந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர். வர்த்தகர் வெடிபொருளை இரும்புக்காக வெட்டும்போது வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர் மாஞ்சோலை மாவட்ட வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இரும்பு வர்த்தகரின் வீட்டிலிருந்து வெடிக்காத மூன்று சிறிய எறிகணைகளும் ஒரு பெரிய எறிகணையும் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முல்லைத்தீவில் மோட்டார் குண்டு வெடித்ததில் இரும்பு வர்த்தகர் கடும்காயம்…
February 8, 2020
February 8, 2020
-
Share This!
You may also like
Recent Posts
- மரபுக்கு மாறாக குற்றப்பத்திரிகை – ஆதிலிங்கேஸ்வரர் கோவில் பூசகர் உட்பட மூவருக்கு பிணை! January 27, 2021
- குருந்தூர் மலை பகுதியில் அகழ்வாராட்சி ஆரம்பமாகிறது! January 27, 2021
- யாழ் மாநகர சபையின் வரவுசெலவுத்திட்டம் வெற்றி January 27, 2021
- இந்திய மீனவர்கள் நால்வருக்கு, யாழ் பல்கலையில் அஞ்சலி! January 27, 2021
- வியட்நாம் நச்சுக்குண்டு வீச்சு : பொறுப்புக் கூறலுக்கான முக்கிய வழக்கு பாரிஸில்! January 27, 2021
Add Comment