Home இலங்கை இலங்கை இராணுவத்தளபதிக்கு எதிரானதடையாணையை பேர்ள் அமைப்பு வரவேற்கிறது…

இலங்கை இராணுவத்தளபதிக்கு எதிரானதடையாணையை பேர்ள் அமைப்பு வரவேற்கிறது…

by admin

(வோஷிங்டன், டி. சி. பெப்ரவரி 14, 2020) -இலக்கையின் இராணுவத்தளபதி ஷவேந்திராசில்வா அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு அமெரிக்கஇராஜாங்க செயலர் மைக் பொம்பேயோ இன்றுதடைவிதித்தார். இந்தத் தடையுத்தரவுக்கு “இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில், 2009ம் ஆண்டு, இலங்கைஇராணுவத்தின் 58ம் படைப்பிரிவு ஈடுபட்டமோசமான மனித உரிமை மீறல்களில் – குறிப்பாகசட்டத்திற்குப் புறம்பான கொலைகளில் – தனது தலைமையதிகாரத்தின் காரணமாக ஈடுபட்டிருந்தார் என்பதற்கான நம்பத்தகுந்த தகவல்கள்”இருப்பதைக் காரணங்காட்டினார்.

அமெரிக்க இராஜாங்க திணைக்களம், வெளிஅலுவல்கள், மற்றும் தொடர்புடைய செயற்றிட்டஒதுக்கீடுகள் என்ற சட்டத்தின் 7031 (c) பிரிவின் கீழ் அமெரிக்க அரசால் ஷவேந்திரா சில்வா மீதுவிதிக்கப்பட்டுள்ள பயணத்தடையை பேர்ள் அமைப்புவரவேற்கிறது. இந்த நடவடிக்கை இலங்கையில்மட்டுமன்றி, உலகெங்கணும் தண்டனைப்பயமின்றிபோர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு, அமெரிக்கா அவர்களை தொடர்ந்தும் சகித்துக்கொள்ளாது என்ற கடுமையான செய்தியைதெளிவுபடுத்தியுள்ளது. இது ஒரு சிறியமுன்னேற்றமேயெனினும் முக்கியமான முன்னேற்றம். இந்தத் தடையானது கொடுமையான குற்றச் செயல்களுக்குப் பலியான மற்றும்அவற்றிலிருந்து தப்பிப்பிழைத்த தமிழர்கள் நீதிக்கான தமது போராட்டத்தைத் தொடரவேண்டும்என சாற்றுகிறது.

ஷவேந்திர சில்வா மட்டுமல்ல, அதிபர் கோத்தபாயஇராஜபக்ஸ, பாதுகாப்புச் செயலர் கமல் குணரத்னஆகியோர் உள்ளிட்ட இலங்கையின் உயர்நிலைஅலுவலர்கள் பலர் போர்க் குற்றங்களிலும்,மானிடத்திற்கெதிரான குற்றங்களிலும்,இனவழிப்பிலும் தொடர்புபட்டிருக்கிறார்கள். சட்டத்திற்குப் புறம்பான கொலைகளில் அவர்களின்ஈடுபாடானது போர்க்குற்றங்களாகவோ அல்லது மானிடத்திற்கெதிரான குற்றங்களாகவோ கணிக்கப்படலாம். உண்மையில்,12 வயதானபாலச்சந்திரன் பிரபாகரன் உள்ளிட்ட பலதமிழர்களை கைகளையும் கண்களையும் கட்டிச்சுட்டுக்கொன்றதற்கான காணொலி மற்றும்புகைப்பட ஆதாரங்கள் இருப்பதோடு, அந்தஆதாரங்கள் கொடுங்குற்றங்கள்இழைக்கப்பட்டதற்கும் அந்தக் குற்றங்களுக்கும்அந்தக்காலகட்டத்தைய தலைமைக்கும்தொடர்பிருப்பதற்கும் சான்றாக விளங்குகின்றன.

இராஜாங்க செயலர் கூறியதுபோல,போர்க்குற்றங்களுக்குப் பொறுப்பானவர்கள்அவற்றுக்கு பதிலளிக்கவேண்டும். காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்கள்உள்ளடங்கலாக பாதிக்கப்பட்டுத் தப்பிப்பிழைத்ததமிழர்கள் போர்க்குற்றங்களுக்கும்,மானிடத்திற்கெதிரான குற்றங்களுக்கும்,இனவழிப்புக்குமான அனைத்துலக நீதியைக் கடந்தபத்தாண்டுகளுக்கும் மேலாக வேண்டிநிற்கிறார்கள். தண்டனைப்பயமில்லாமைக்கு எதிரான இந்தமுன்னெடுப்பைத் தொடர்ந்து, இலங்கையுடனானதனது தொடர்பாடல்களில் ஐக்கிய அமெரிக்கா பொறுப்புக்கூறல் பற்றிய உறுதியான நிலையைப்பேணவேண்டும் என பேர்;ள் வற்புறுத்துகிறது. பொறுப்புக்கூறல் விடயத்திலும் அரசியல்சீர்திருத்தத்திலும் தக்கவைக்கத்தக்கமுன்னேற்றங்களை வலியுறுத்த ஐக்கிய அமெரிக்காஇலங்கையுடனான அரச உறவைப்பயன்படுத்தவேண்டும். மேலும், ஐக்கிய அமெரிக்கஅரசானது போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாகசந்தேகிக்கப்படும் ஏனைய இலங்கைஅலுவலர்களுக்கெதிராகவும் தடைகளைக்கொண்டுவரவேண்டும் என்றும், குற்றவாளிகளுக்குதண்டனைவழங்க உலகளாவிய சட்டவிதிகளைப்பயன்படுத்துவதை ஆதரிக்க வேண்டும் என்றும்,தமிழர்களுக்கு நீதி கிடைப்பதற்கான அனைத்துலகமுன்னெடுப்புகளை ஆதரிக்க வேண்டும் என்றும்பேர்ள் வேண்டிக்கொள்கிறது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More