பிரதான செய்திகள் விளையாட்டு

சச்சினுக்கு லாரியஸ் விருது வழங்கப்பட்டுள்ளது.


விளையாட்டு உலகின் மிக உயரிய அங்கீகாரங்களில் ஒன்றாக கருதப்படும் லாரியஸ் விருது சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் விளையாட்டு உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான லாரியஸ் விருதுகள் வழங்கப்படுகின்றன.  அவ்வகையில் 2019- ஆம் ஆண்டுக்கான லாரியஸ் விருதுகள் வழங்கும் விழா ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் நடைபெற்றது.

இதில் 2019-ம் ஆண்டின் சிறந்த வீரருக்கான லாரியஸ் விருது நட்சத்திர கால்பந்து வீரர் மெஸ்சி மற்றும் பார்முலா முன் கார் பந்தயத்தில் 6 முறை சம்பியன் பட்டம் வென்ற ஹாமில்டன் ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது.

இதேபோல் சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கான விருதை அமெரிக்க ஜிம்னாஸ்டிக்ஸ் ஜாம்பவான் சிமோன் பைல்ஸ் தட்டிச் சென்றார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஆடவருக்கான ரக்பி உலகக்கோப்பையை வென்ற தென் ஆபிரிக்க அணிக்கு சிறந்த அணிக்கான விருது வழங்கப்பட்டது. ஜெர்மனியின் கூடைப்பந்து ஜாம்பவான் டிர்க் நோவிட்ஸ்கி, லாரியஸ் வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்றார்.

சச்சின் டெண்டுல்கருக்கான விருதினை அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் வோக் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது  #சச்சின் டெண்டுல்கர்  #லாரியஸ்விருது #மெஸ்சி  #ஹாமில்டன்

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap