கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இனியபாரதி என அழைக்கப்படும் குமாரசாமி புஸ்பகுமாரின் விளக்கமறியல் உத்தரவு எதிர்வரும் மார்ச் மாதம் 05 ஆம் திகதி வரை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது
சந்தேக நபர், இன்றையதினம் நீதமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான முஹம்மது ஹனிபா முஹமட் ஹம்ஸாவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது உத்தரவிட்டார்.
அம்பாறை – திருக்கோவில், அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு ஆகிய பிரதேசங்களில் 2006 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரை 7 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பிலேயே இனியபாரதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு,காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் ஆகிய இடங்களில் செய்யப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சிலரை ஆட்கடத்தலில் ஈடுபடுத்தியமை, அதற்கு உதவி ஒத்தாசை புரிந்தமை தொடர்பில் இனியபாரதிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. #இனியபாரதி #விளக்கமறியல் #கிழக்குமாகாணசபை #காணாமல்ஆக்கப்பட்ட
Add Comment