Home இலங்கை விடுமுறையில் சென்ற இராணுவ சிப்பாய், எலுகொடை ஓயாவில் சடலமாக மீட்பு…

விடுமுறையில் சென்ற இராணுவ சிப்பாய், எலுகொடை ஓயாவில் சடலமாக மீட்பு…

by admin

பிலிமதலாவ போயகம பிரதேசத்தில் எலுகொடை ஓயாவில் இருந்து இராணுவ சிப்பாய் ஒருவரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று (23.02.20) காலை இந்த சடலம் பிரதேசவாசிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 25 வயதுடைய குறித்த பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இராணுவத்தில் பணியாற்றும் இவர் விடுமுறைக்காக வீடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மரணம் தொடர்பில் தவுலகல காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More