இலங்கை பிரதான செய்திகள்

நந்திக்கடல் – நாயாறு புனரமைப்பில்   விசேட கவனம் :

நீர் வேளாண்மையை  விருத்தி செய்யும் நோக்கில் நந்திக்கடல் நாயாறு மற்றும் தொண்டமானாறு உட்பட வடக்கின் பல்வேறு நீர் நிலைகளை புனரமைப்பது தொடர்பான கலந்துரையாடல் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும்   சம்மந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையில் நடைபெற்றது.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் இன்று(25.02.2020) இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் உடனடியாக நாயாறு மற்றும் நந்திக்கடல் ஆகிய நீர்நிலைகளின் புனரமைப்பு பணிகளை ஆரம்பிப்பது தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த புனரமைப்பு பணிகளை உடனடியாக ஆரம்பிப்பதற்கு தேவையான,   நாரா எனப்படும் நீர்வாழ் உயிரின ஆராய்ச்சி நிறுவனத்தின் அனுமதிபிரதேச செயலர்கள் ஊடாக அகழப்படுகின்ற சேற்று மணலை கொட்டுகின்ற இடத்தினை தெரிவு செய்து அங்கு கொட்டுவதற்கான சுற்றுச் சூழல் திணைக்களம்,  வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம்கரையோர பாதுகாப்பு அதிகார சபை ஆகியவற்றின் அனுமதிகளைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழ் அரசியல் தலைமைகளின் அக்கறையீனம் காரணமாக கடந்த பல ஆண்டுகளாக புனரமைப்பு பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படாமல் உள்ள நாயாறு மற்றும் நந்திக்கடல் நீர் நிலைகளில் சுனாமி அனர்த்தத்தினால் கரையொதுக்கப்பட்ட பெருமளவு ஆழ்கடல் பொருட்களும் மணல் படுக்கைகளும் தேங்கி கிடக்கின்றன.

இதன்காரணமாக குறித்த களப்பு பிரதேசத்தில் நீர்வாழ் உயினங்களின் உற்பத்தி குறைவடைந்து வருவதாக குறித்த நீர்நிலைகளை வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வருகின்ற பிரதேச மக்களினால் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வருப்பட்ட நிலையில் குறித்த களப்பு நீர் நிலைகளை புனரமைப்பு செய்வதில் அமைச்சர் தீவிர கவனம் செலுத்தி வருக்கின்றார்.

குறித்;த நீர்நிலைகள் இரண்டும் பூரணமாக புனரமைக்கப்படுகின்ற நிலையில் சுமார் 3000 ஆயிரம் குடும்பங்கள் நன்மையடையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை தொண்டமானாறு, இரணைமாதா நகர், கிறாஞ்சி, செட்டியார் குறிச்சி போன்ற பிரதேச நீர்நிலைகளையும் புனரமைப்பு செய்வது தொடர்பான நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இன்றைய கலந்துரையாடலில் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சின் செயலாளர் உட்பட்ட அதிகாரிகள், இலங்கை கடற்றொழில் துறைமுகக் கூட்டுத்தாபனம், கரையோர முகாமைத்துவ திணைக்களம், நீர்வாழ் உயிரின ஆராய்ச்சி நிறுவனம்(நாரா), கரையோர முகாமைத்துவ திணைக்களம், கடற்றொழில் திணைக்களம் ஆகியவற்றின் நிறைவேற்று அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தமை சுட்டிக் காட்டத்தக்கது.  #நந்திக்கடல்   #நாயாறு  #டக்ளஸ்

ஊடகப் பிரிவு: கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சு

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.